Trace Id is missing

உங்கள் சேவைகள் ஒப்பந்தம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

நாங்கள் Microsoft சேவைகள் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறோம், இந்த மாற்றங்கள் நீங்கள் பயன்படுத்தும் Microsoft நுகர்வோர் ஆன்லைன் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்குப் பொருந்தும். எங்கள் விதிமுறைகளைத் தெளிவாக விளக்கவும், அவை தொடர்ந்து வெளிப்படையாக உங்களுக்கு இருக்கவும், அத்துடன் புதிய Microsoft தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அம்சங்களை நிர்வகிக்கும் வகையிலும் இந்த மாற்றங்களை மேற்கொள்கிறோம்.

கீழே சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் செப்டம்பர் 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும். செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதன் பிறகு எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், மாற்றங்கள் செய்யப்பட்ட Microsoft சேவைகள் ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் கொள்ளப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Microsoft சேவைகள் ஒப்பந்தம் என்றால் என்ன?

Microsoft சேவைகள் ஒப்பந்தமானது உங்களுக்கும் Microsoft நிறுவனத்துக்கும் (அல்லது அதன் துணை நிறுவனங்களில் ஒன்றுக்கும்) இடையேயான ஒப்பந்தமாகும், இது Microsoft நுகர்வோர் ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கும். ஒப்பந்தத்தில் அடங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முழுப் பட்டியலை இங்கே காணலாம்.

Microsoft சேவைகள் ஒப்பந்தத்தில் அடங்காத தயாரிப்புகள் மற்றும் சேவைகள் யாவை?

Microsoft சேவைகள் ஒப்பந்தமானது, நிறுவனம், கல்வி அல்லது அரசாங்க வாடிக்கையாளர்களுக்கான Microsoft 365, Azure, Yammer அல்லது Skype for Business ஆகிய தயாரிப்புகள் உள்பட, பேரளவில் உரிமம் பெறும் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேகத் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் பொருந்தாது. வணிகத்திற்கான Microsoft 365-க்குப் பொருந்தக்கூடிய தகவல்கள் தொடர்பான பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் இணக்கத்தன்மைக்கான உறுதிப்பாடுகளுக்கு, Microsoft 365 நம்பிக்கை மையத்திற்குச் செல்லவும்: https://www.microsoft.com/trust-center/product-overview.

Microsoft சேவைகள் ஒப்பந்தத்தில் Microsoft என்ன மாற்றங்களைச் செய்கிறது?

மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களின் சுருக்கமான விவரத்தை இங்கே வழங்கியுள்ளோம்.

எல்லா மாற்றங்களையும் பார்க்க, முழுமையான Microsoft சேவைகள் ஒப்பந்தத்தைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

இந்த விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?

Microsoft சேவைகள் ஒப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் செப்டம்பர் 30, 2023 அன்று நடைமுறைக்கு வரும். அதுவரை, உங்கள் நடப்பு விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இந்த விதிமுறைகளை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதன் பிறகு எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பயன்படுத்தினாலோ அல்லது அணுகினாலோ, மாற்றங்கள் செய்யப்பட்ட Microsoft சேவைகள் ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் கொள்ளப்படும். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி செப்டம்பர் 30, 2023 ஆம் தேதிக்கு முன் உங்கள் Microsoft கணக்கை மூட வேண்டும்.